அரசு ஆணைகள்

நீர்வளத்துறை

தேதி

28-08-2023

G.O.(D)No.191

நீர்வளத்துறை – தென்காசி மாவட்டம் - அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம் கட்டுமானப் பணி திட்டத்திற்காக தி/வா. Gammon India Ltd., Mumbai நிறுவனத்திற்கும் அரசுக்கும் இடையே காலநீட்டிப்பு காலத்தில் விலை வித்தியாசப் பட்டியல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நடுவர் மன்றத் தீர்ப்பின் மீது வழங்கப்பட்ட மற்றும் உத்திரவிடப்பட்ட தொகையான ரூ.3,18,38,371/-இல் நடுவர் கட்டணம் வழங்கப்பட்ட தொகையினை தவிர்த்து மீதமுள்ள தொகை ரூ.2,86,64,914/-இல் 25 சதவீத தொகையான ரூ.71,66,229/-னை மட்டும் நீதிமன்றத்தில் வைப்பீடு செய்வதற்கு நிதி ஒப்பளிப்பு அளித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

24-07-2023

G.O.(D)No.155

தமிழ்நாடு நீர்வள ஒருங்கிணைப்பு திட்டம், கோதையாறு வடிநில கோட்டம் – இராதாபுரம் பிரதான கால்வாய் ஹனுமாநதி உபவடிநில பகுதிகளில் பிரதான கால்வாய் மற்றும் நீர்த்தேக்கங்கள் மறு சீரமைத்தல் (Package No.4 / IAMWARM / WRD / HMD Works / III /2009-10) திட்டப் பணிக்களுக்கான துறை சார்ந்த நடுவர் திரு A.நாகமணி, கண்காணிப்பு பொறியாளர் (ஓய்வு) அவர்களுக்கு நடுவர் கட்டணமாக ரூ.31,000/-க்கு நிதி ஒப்பளிப்பு அளித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

10-01-2023

G.O.(D)No.7

நீர்வளத்துறை – தூத்துக்குடி மாவட்டம் - தமிழ்நாடு நீர்வள ஒருங்கிணைப்புத் திட்டம், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி அமைப்பில் தெற்கு பிரதான வாய்க்கால் மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தை உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தியது ஒப்பந்தக்காரர் திரு.எஸ்.கருப்பையா என்பவரால் தொடரப்பட்ட ஆர்பிட்ரேசன் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட நடுவர் மன்றத் தீர்ப்பின் அவார்டு தொகை ரூ.61,67,561/- மற்றும் 31.05.2022 வரை ஆண்டுக்கு 10சதவீத வட்டி ரூ.1,14,81,659/- ஆக மொத்தம் ரூ.1,76,49,220/-க்கு நிதி ஒப்பளிப்பு அளித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

2023 | 2022 |