அரசு ஆணைகள்

உயர்கல்வி துறை

தேதி

04-11-2022

G.O.(Ms).No. 242

தொழில்நுட்பக் கல்வி – அரசு / அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் அரசு / அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் நவீன ஆய்வக உபகரணங்கள் / கணினிகள் மற்றும் கணினி சார்ந்த பொருட்கள் / அறைகலன்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வது – முதல்வரின் நிதி அதிகார உச்சவரம்பினை உயர்த்துதல் தொழில் நுட்பக்கல்வி ஆணையர் நிலையிலேயே அனுமதி வழங்கியது – பின்னேற்பு வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

03-11-2022

G.O.(Ms) No.238

கல்லூரிக் கல்வி – அரசு உதவி பெறும் கல்லூரிகள் – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவுக் கல்லூரி, கமுதி – தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்காற்றுச்) சட்டம், 1976, (சட்டம் எண் 19/1976) பிரிவு 14–A–ன் படி அக்கல்லூரியை நிர்வகிக்க தனி அலுவலரை நியமனம் செய்தல் – ஆணைகள் – வெளியிடப்படுகிறது.

தேதி

19-10-2022

G.O.(Ms) No.221

கல்லூரிக் கல்வி – அரசு உதவி பெறும் கல்லூரிகள் – மதுரை சமூக அறிவியல் கல்லூரி (Madurai Institute of Social Sciences), மதுரை – தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்காற்றுச்) சட்டம், 1976, பிரிவு 14-A(1)(a)-ன்படி அக்கல்லூரியை நிர்வகிக்க தனி அலுவலரை நியமனம் செய்தல் – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

14-10-2022

G.O.(Ms) No.216

கல்லூரிக் கல்வி - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி – 2022-23ஆம் கல்வியாண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறையில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் கட்டுதல் - ரூ.14,94,80,000/-க்கு நிருவாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

23-09-2022

Letter (Ms) No. 189

உயர் கல்வி - பல்கலைக்கழகங்கள் - அனைத்து வகை இளங்கலை பட்டப்படிப்புகளுக்கும் இரண்டாம் வருட பருவத் தேர்வில் தமிழ் மொழி பாடத்தினை சேர்த்தல் – நெறிமுறைகள் வெளியிடுதல் - குறித்து.

தேதி

26-08-2022

G.O.(Ms).No. 166

தொழில்நுட்பக் கல்வி - 2022-23 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு - இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் போன்ற புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணாக்கர்களுக்கு, அவர்களின் படிப்புச் செலவிற்கான முழுத் தொகையினையும் வழங்குவதற்கான வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

22-08-2022

Letter (Ms) No. 162

உயர் கல்வி - பல்கலைக்கழகங்கள் - அனைத்து வகை இளங்கலை பட்டப்படிப்புகளுக்கும் இரண்டாம் வருட பருவத் தேர்வில் தமிழ் மொழி பாடத்தினை சேர்த்தல் – குறித்து.

தேதி

12-08-2022

G.O.(Ms) No.155

உதவிபெறும் கல்லூரிகள் - மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி - தனி அலுவலர் நியமனக்காலம் 15.07.2022-ல் நிறைவடைந்தது - 16.07.2022 முதல் மேலும் ஒராண்டு காலத்திற்கு தனி அலுவலர் நியமன - காலநீட்டிப்பு செய்தல் -ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

10-08-2022

G.O.(Ms) No.152

கல்லூரிக் கல்வி - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - 2020-21-ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்ட கரூர் மாவட்டம், தரகம்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் 2022-23-ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்ட திருப்பூர் மாவட்டம் - தாராபுரம், ஈரோடு மாவட்டம் – தாளவாடி, விருதுநகர் மாவட்டம் - திருச்சுழி, திண்டுக்கல் மாவட்டம்- ஒட்டன்சத்திரம் ஆகிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு நிரந்தர கட்டடங்கள் கட்டுதல் – ரூ.62,24,00,000/-க்கு நிருவாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

04-08-2022

G.O.(Ms)No.143

கல்லூரிக் கல்வி - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம், பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் கட்டுதல் – ரூ.12,46,00,000/- க்கு நிருவாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

02-08-2022

G.O.(Ms) No.142

கல்லூரிக் கல்வி - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - 2022–23–ஆம் கல்வியாண்டில் ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் சேர்க்காடு, வேலூர் மாவட்டம் ஆகிய இடங்களில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு (இருபாலர்) நிரந்தர கட்டடங்கள் கட்டுதல் –ரூ.24,86,00,000/-க்கு நிருவாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

02-08-2022

G.O.(Ms)No.141

கல்லூரிக் கல்வி - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - 2022–23–ஆம் கல்வியாண்டில் திருநெல்வேலி மாவட்டம், மானூரில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு (இருபாலர்) நிரந்தர கட்டடம் கட்டுதல் – ரூ.11,33,00,000/-க்கு நிருவாக அனுமதி மற்றும் நிதிஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

07-06-2022

GO (Ms) No. 90

உயர்கல்வித் துறை – 2022-23 ஆம் ஆண்டு மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு –தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் – சிறைக் கைதிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்காக, கட்டணமின்றி பயின்று பட்டம் பெறும் திட்டம் செயல்படுத்துதல் – நிர்வாக அனுமதி - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

07-01-2022

GO (Ms) No. 5

உயர்கல்வித் துறை - 2021-22 ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்பு – உயர்கல்வித் துறையின் கீழுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பெறப்பட்ட முனைவர் பட்ட ஆய்வுச் சுருக்கம் மற்றும் ஆய்வுத் தொகுப்புகளை தமிழில் தொகுத்து, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வாயிலாக இணையத்தில் வெளியிடுதல் – அறிவுறுத்தல்கள் – ஆணைகள் வெளியிடப்படுகிறது.

2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2015 |