அரசு ஆணைகள்

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை

தேதி

03-11-2022

G.O(Ms)No 221

தொழில் – சிப்காட் நிலை –V, தொழிற்பேட்டை – நில எடுப்பு – கிருஷ்ணகிரி மாவட்டம் – தேன்கனிக்கோட்டை வட்டம் – நாகமங்கலம் கிராமம் – புல எண்.32/1 (பகுதி) முதலான 491.00.03 ஹெக்டேர் (1212.77 ஏக்கர்) பட்டா நிலங்களை நில எடுப்பு – புல எண்.46/2 முதலான 92.36.00 ஹெக்டேர் (228.13 ஏக்கர்) புறம்போக்கு நிலங்கள் நில உரிமை மாற்றம் – தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்புச் சட்டம் 1997 (தமிழ்நாடு சட்டம் 10/1999)-ன் கீழ் (அல்லது) தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் கையகப்படுத்துதல் மற்றும் தற்காலிகப் பணியிடங்கள் ஏற்படுத்துதல் – நிருவாக அனுமதி – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

31-10-2022

GO(MS) No 217

நில எடுப்பு – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்காக சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைத்தல் - தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்திலுள்ள மாதவன்குறிச்சி கிராமத்தில் அலகு-VIஇன் தொகுதி 1 முதல் 11 வரையில் உள்ள 110.96.34 ஹெக்டேர் புன்செய் நிலங்களை கையகப்படுத்துவதற்கு, நிலம் கையகபடுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டம், (RFCTLARR Act) 2013இன் பிரிவு 19(1)ன் படி விளம்புகை அறிவிக்கை செய்யப்பட்டதில், அலகு-VIஇன் தொகுதி 11-க்கு தீர்வம் பிறப்பிப்பதற்கான காலம் நிறைவடைய உள்ளதால், மேற்படி சட்டத்தின் பிரிவு 25ன் படி தீர்வம் அளிப்பதற்கான கால அவகாசத்தினை 1.11.2022 முதல் மேலும் 12 மாதங்கள் நீட்டித்தல் – ஆணை – வெளியிடப்படுகின்றன.

தேதி

31-10-2022

GO(MS) No 216

நில எடுப்பு – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்காக சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைத்தல் - தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்திலுள்ள மாதவன்குறிச்சி கிராமத்தில் அலகு-Vஇன் தொகுதி 1 முதல் 12 வரையில் உள்ள 113.25.50 ஹெக்டேர் புன்செய் நிலங்களை கையகப்படுத்துவதற்கு, நிலம் கையகபடுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டம், (RFCTLARR Act) 2013இன் பிரிவு 19(1)ன் படி விளம்புகை அறிவிக்கை செய்யப்பட்டதில், அலகு-Vஇன் தொகுதி 3க்கு தீர்வம் பிறப்பிப்பதற்கான காலம் நிறைவடைய உள்ளதால், மேற்படி சட்டத்தின் பிரிவு 25ன் படி தீர்வம் அளிப்பதற்கான கால அவகாசத்தினை 1.11.2022 முதல் மேலும் 12 மாதங்கள் நீட்டித்தல் – ஆணை – வெளியிடப்படுகின்றன.

தேதி

22-09-2022

GO(MS) No 197

தொழில் - சிப்காட் - நில எடுப்பு - செங்கல்பட்டு மாவட்டம் – மதுராந்தகம் வட்டம் - சூரை, சித்தாலமங்கலம் மற்றும் புழுதிவாக்கம் கிராமங்கள் 51.21.5 ஹெக்டேர் (126.50 ஏக்கர்) பட்டா நிலங்கள் நில எடுப்பு - 0.64.0 ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலங்கள் நில உரிமை மாற்றம் - சிப்காட் தொழிற்பூங்கா - தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்புச் சட்டம், 1997-ன் கீழ் (அல்லது) தனிநபர் நேரடி பேச்சுவார்த்தை மூலம் கையகப்படுத்துதல் - நில எடுப்புக்கான பணியிடங்கள் ஏற்படுத்துதல் - நிருவாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை -வெளியிடப்படுகிறது.

தேதி

12-08-2022

G.O (MS) No 180

தொழில் - சிப்காட் - நில எடுப்பு - திருவள்ளூர் மாவட்டம் - கும்மிடிப்பூண்டி வட்டம் - மாநெல்லூர், சூரப்பூண்டி, சாணாபுத்தூர். மாதர்பாக்கம் மற்றும் வாணியமல்லி ஆகிய கிராமங்கள் - 908.26.70 ஹெக்டேர் (2243.40 ஏக்கர்) பட்டா நிலங்கள் நில எடுப்பு - 76.91.0 ஹெக்டேர் (189.97 ஏக்கர்) அரசு புறம்போக்கு நிலங்கள் நில உரிமை மாற்றம் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற சிப்காட்) நிறுவனம் தொழிற்பூங்கா அமைக்க - தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்புச் சட்டம். 1997-ன் கீழ் (அல்லது) தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் கையகப்படுத்துதல் மற்றும் நில எடுப்புக்கான பணியிடங்கள் ஏற்படுத்துதல் -நிருவாக அனுமதி - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

28-06-2022

G.O (MS) No 129

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கிருஷ்ணகிரி மாவட்டம். சூளகிரி வட்டம், உத்தனப்பள்ளி உள்வட்டம், ஓசூர் - அதியமான்கோட்டை சாலை முதல் நல்லராலப்பள்ளி கிராமம் வரை கீ.மீ0/0 முதல் 2/585 வரை இருவழிச் சாலை அமைக்க சூளகிரி வட்டம், அயர்னப்பள்ளி கிராம புல எண்.711/2 முதலியன மொத்த விஸ்தீரணம் 5.26.81 ஹெக்டேர் பட்டா நிலங்களை தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் சட்டம் 1997-ன் கீழ் நெடுஞ்சாலைத் துறைக்கு கையகப்படுத்துதல் - கிராம புல எண்.787 மற்றும் புல எண்.788/24 முதலியனவற்றில் மொத்தம் விஸ்தீரணம் 0.18.64 ஹெக்டேர் புறம்போக்கு நிலங்களை நெடுஞ்சாலைத் துறைக்கு நிலமாற்றம் செய்தல் - நிருவாக அனுமதி அளித்தல் மற்றும் ரூ.4.62,48,951/-க்கு நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

13-05-2022

G.O(MS)No 99

தொழில் துறை - சிப்காட் - நில எடுப்பு - தேனி மாவட்டம் மற்றும் வட்டம் - தப்புக்குண்டு, உப்பார்பட்டி மற்றும் பூமலைக்குண்டு கிராமங்கள் - 1.94.57 ஹெக்டேர் பட்டா நிலங்கள் நில எடுப்பு - 0.03.50 ஹெக்டேர் புறம்போக்கு நிலங்கள் நில உரிமை மாற்றம் - மொத்தம் 1.98.07 ஹெக்டேர் (4.89 ஏக்கர்) நிலங்கள் - புதிய சிப்காட் உணவுப் பூங்காவிற்கு பாதை வசதி - தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்புச் சட்டம், 1997 (தமிழ்நாடு சட்டம் 10/1999)-ன் படி/தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் கையகப்படுத்துவது - நிர்வாக அனுமதி - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

25-04-2022

G.O(D)No 38

தொழில் துறை - 2022-2023ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் - அரியலூர் சிமெண்ட் ஆலையில் 2.50 கோடி - ரூபாய் செலவில் 10,000 மெட்ரிக் டன் கொள்ளளவு உடைய ஒரு புதிய மூடும் வசதி கொண்ட நிலக்கரி கிடங்கு (Closed Coal shed) அமைக்கப்படும் - அனுமதி ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

25-04-2022

G.O(D) No 37

தொழில் துறை - 2022 - 2023 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் - அரியலூர் புதிய சிமெண்ட் ஆலையில் மாற்று எரிபொருள் எரியூட்டும் அமைப்பு ஒன்று 30 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும் - அனுமதி ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

25-04-2022

G.O(D) No 39

தொழில் துறை - 2022-2023ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் அரியலூர் புதிய சிமெண்ட் ஆலையில் உற்பத்தி ஆகும் சிமெண்ட்டை பழைய ஆலையின் சிமெண்ட் கொள்கலன்களுக்கு (Cement silos) கொண்டு செல்லும் அமைப்பு (Cement conveying system) ஒன்று 3.50 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும் - அனுமதி ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

25-04-2022

G.O(D) No 40

தொழில் துறை - 2022-2023ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் - ஆலங்குளம் சிமெண்ட் ஆலை வளாகத்தில், மணிக்கு 80 மெட்ரிக் டன் அரவை திறன் கொண்ட ஒரு புதிய சிமெண்ட் அரவை இயந்திரம், கட்டமைப்பு வசதிகளுடன் 40 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும் - அனுமதி ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

12-04-2022

G.O(MS) No 85

நில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமம், அலகு-VIII, தொகுதி-2ல் உள்ள 14.41.00 ஹெக்டேர் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013ன் அவசரகாலப் பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு, பிரிவு 11(1)ன் கீழான முதல்நிலை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

2023 | 2022 | 2021 | 2020 | 2015 | 2014 |