அரசு ஆணைகள்

பொதுப்பணி துறை

தேதி

03-11-2008

G.O.Ms.No. 321

நீர்வளம் - பொதுப்பணித்துறை -நிலத்தடி நீர் வளத்தினைப் பெருக்கஆறுகள், சிற்றாறுகள் மற்றும் நீரோடைகளில் தடுப்பணைகள் அமைக்கும் பெருந்திட்டத்தினை ரூ.550 கோடியில் 2008-2009 முதல் 2010-2011 வரையிலான மூன்று ஆண்டுகளில் செயல்படுத்த நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது - 2008-2009 ம் ஆண்டில் நீர் வளஆதாரத்துறையினால் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துகோட்டை வட்டம், எல்லாபுரம் யூனியன் பாலீஸ்வரம் கிராமம் அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே ரூ 7,44,00,000 மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் திட்டம் -ஒப்பளிப்பு - ஆணை -வெளியிடப்படுகிறது.

தேதி

20-06-2008

G.O.Ms.No. 213

பாசனம்/நபார்டு,RIDF/XIII. சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை வட்டம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 27 கண்மாய்களை நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் ரூ.557.85 இலட்சம் செலவில் புனரமைப்பு செய்தல் - நிர்வாக ஒப்புதல் - ஆணை -வெளியிடப்படுகிறது.

தேதி

10-06-2008

G.O.Ms.No. 201

குழு - பொதுப்பணித் துறை -சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் - சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி அகற்ற நடவடிக்கை எடுத்தல் - மாண்புமிகு அமைச்சர் (வருவாய் மற்றும் வீட்டு வசதி) அவர்களின் தலைமையில் குழு அமைத்தல் -ஆணை - வெளியிடப்படுகிறது

தேதி

10-06-2008

G.O.Ms.No. 198

நீர்வளம் - பொதுப்பணித்துறை - நிலநீர் வளத்தினை செறிவூட்டும் பெரும்திட்டம் - ரூ. 550 கோடி மதிப்பீட்டில் 3 ஆண்டுகளில் செயல்படுத்துதல் - நிர்வாக ஒப்புதல் - அளிக்கப்படுகிறது.

தேதி

21-05-2008

G.O.Ms.No. 141

பாசனம் - நீர்வள ஆதாரத் துறை - 2008-2009 ஆம் ஆண்டிற்கான பகுதி மிமி திட்டம் - திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம் பெருமாள்பட்டி கிராமத்தில் தேவியார் ஆற்றின் குறுக்கே ரூ.38.00 இலட்சம் செலவில் ஒரு தடுப்பணை அமைக்கும் திட்டம் - நிலை நிதிக் குழுவினால் ஒப்புதல் அளிக்கப்பட்டது - நிர்வாக ஒப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

21-05-2008

G.O.Ms.No. 140

பாசனம் - நீர்வள ஆதாரத் துறை - 2008-2009 ஆம் ஆண்டிற்கான பகுதி மிமி திட்டம் - திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம் உப்பார் ஓடையின் குறுக்கே ரூ.15.00 இலட்சம் செலவில் ஒரு தடுப்பணை அமைக்கும் திட்டம் - நிலை நிதிக் குழுவினால் ஒப்புதல் அளிக்கப்பட்டது - நிர்வாக ஒப்புதல் ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

21-05-2008

G.O.Ms.No. 137

பாசனம் - நீர்வள ஆதாரத் துறை - 2008-2009 ஆம் ஆண்டிற்கான பகுதி மிமி திட்டம் - தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், க.புதுப்பட்டி கிராமத்தில் கண்ணூத்து ஓடையின் குறுக்கே ரூ.24.00 இலட்சம் செலவில் மட்டும் தடுப்பணை அமைக்கும் திட்டம் - நிலை நிதிக் குழுவினால் ஒப்புதல் அளிக்கப்பட்டது - நிர்வாக ஒப்புதல் ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

21-05-2008

G.O.Ms.No. 138

பாசனம் - நீர்வள ஆதாரத் துறை - 2008-2009 ஆம் ஆண்டிற்கான பகுதி மிமி திட்டம் - தூத்துக்குடி மாவட்டம், ஆலந்தா கிராமத்தில் ஆலந்தா அணைக்கட்டு அருகே ரூ.20.00 இலட்சம் செலவில் தலைப்பு மதகு மற்றும் பாதுகாப்பு சுவர் அமைக்கும் திட்டம் - நிலை நிதிக் குழுவினால் ஒப்புதல் அளிக்கப்பட்டது - நிர்வாக ஒப்புதல் ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

21-05-2008

G.O.Ms.No. 136

பாசனம் - நீர்வள ஆதாரத் துறை - 2008-2009 ஆம் ஆண்டிற்கான பகுதி மிமி திட்டம் - தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம் பாலக்குறிச்சி கிராமத்தின் அருகே கருமேனியார் ஆற்றின் குறுக்கே ரூ.58.00 இலட்சம் செலவில் தடுப்பணை கட்டும் திட்டம் - நிலை நிதிக் குழுவினால் ஒப்புதல் அளிக்கப்பட்டது - நிர்வாக ஒப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

21-05-2008

G.O.Ms.No. 150

பொதுப்பணித்துறை - 2008 - 2009ஆம் ஆண்டிற்கான பகுதி-ஐஐ திட்டங்கள் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இரண்டு அறைகளுடன் கூடிய ஆய்வு மாளிகை கட்டுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

07-02-2008

G.O.Ms.No. 34

பாசனம் - திருவண்ணாமலை மாவட்டம் - செங்கம் வட்டம் - சாத்தனூர் நீர்த்தேக்கம் - 2007-2008ம் ஆண்டில் சாத்தனூர் அணை இடது மற்றும் வலதுபுறக் கால்வாய்களில் உள்ள பாசன பரப்பிற்காகவும் மற்றும் திருக்கோவிலூர் அணைக்கட்டு பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு இரண்டாம் போக பாசனத்திற்காகவும் - தண்ணீர் திறந்து விடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

05-02-2008

G.O.Ms.No. 33

பாசனம் - பொதுப்பணித்துறை - வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், கவசம்பட்டு கிராமத்திற்கு அருகில் பாலாற்றில் ஒரு பிரிப்புச் சுவர் கட்டுவதற்கும், திசைமாற்றி சுவர்கள் அமைப்பதற்கும், கொட்டாற்றின் இயற்கை நீர்ப்போக்கு தன்மைக்கு புனரமைக்கும் பணி மற்றும் இதர செலவினங்களுக்காக ரூ.650.00 இலட்சம் செலவினத்திற்கு மாநில நிதியிலிருந்து ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

22-01-2008

G.O.Ms.No. 17

பொதுப்பணித்துறை - ஏரிகள் / நீர்நிலைகளை தூர் வாருதல் மற்றும் சீரமைத்தல் - சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் ஒவ்வொரு தொகுதியிலும் பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ள ஏரிகளில் இரண்டு ஏரிகள் / நீர்நிலைகளை நபார்டு உதவியுடன் சீரமைத்தல் - ரூபாய் 34.8114 கோடிக்கு நிர்வாக ஒப்புதலளித்து ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

04-01-2008

G.O.(Rt.).No. 19

பாசனம் - கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வட்டம் - கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து 2007-2008ஆம் ஆண்டில் இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுதல்- ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

03-01-2008

G.O.(Rt.).No. 13

பாசனம் - ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்கள் - 2007-08ஆம் ஆண்டு - இரண்டாம் முறை புன்செய் பாசனம் - கீழ்பவானி திட்டபிரதானக் கால்வாய் மற்றும் விரிவாக்கக்கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்ன சமுத்திரம் பகிர்மானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மூலம் பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது

2011 | 2010 | 2009 | 2008 | 2007 | 2006 | 2005 | 2003 | 2001 | 2000 |