அரசு ஆணைகள்

வேளாண்மை - உழவர் நலத் துறை

தேதி

27-12-2022

G.O.Ms.No.304

வேளாண்மை-உழவர் நலத் துறை – பாரம்பரிய நெல் இரகங்களைப் பாதுகாத்துப் பயிரிடும் விவசாயிகளை ஊக்குவித்திடும் விதமாக பாரம்பரிய முறையில் நெல் சாகுபடி செய்து அதிக மகசூல் பெற்று, மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெறும் விவசாயிகளுக்கு பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது வழங்குதல் – நிதி ஒப்பளிப்பு – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

16-12-2022

G.O.Ms.No.298

வேளாண்மை-உழவர் நலத் துறை – வேளாண் நிதிநிலை அறிக்கை – கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் – 2022-2023 – வேளாண்மைத் துறை, தோட்டக்கலை (ம) மலைப் பயிர்கள் துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மற்றும் சர்க்கரைத் துறை மூலம் திட்டம் செயல்படுத்துதல் – ரூ.234.22926 கோடிக்கான நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

07-12-2022

G.O.Ms.No.290

வேளாண்மை - உழவர் நலத்துறை - கலைஞரின் அனைத்துகிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-22 வேளாண்மைப் பொறியியல் துறைக்கு ஒப்பளிக்கப்பட்ட தொகையிலிருந்து செலவிடப்படாத தொகை ரூ.75.52 கோடியினை வேளாண்மைத்துறை மற்றும் பிற துறைகளுக்கு திட்டங்களை செயல்படுத்த பகிர்ந்தளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

26-10-2022

G.O.Ms.No.256

வேளாண்மை உழவர் நலன் - 2021-22ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் - மாநில அளவில் உள் ஊரில் உள்ள புதுமையான வேளாண்மை தொழில் நுட்பங்கள் மற்றும் வேளாண் சாதனங்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், விவசாயிகளுக்கு பரிசு வழங்க 2021-22 நிதியாண்டில் ஒப்பளிப்பு செய்யப்பட்ட தொகையில் இறுதி திருத்த நிதியொதுக்கத்தில் வேளாண்மை இயக்குநரால் ஒப்படைப்பு செய்யப்பட்ட ரூ.2,00 இலட்சத்தினை, 2022-23ஆம் ஆண்டில் நிதி ஒப்பளிப்பு செய்தல் ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

21-10-2022

Letter.Ms.NO.254

வேளாண்மை உழவர் நலன் – 2022-2023ஆம் ஆண்டு மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம் - இன வாரியான செயலாக்க வழிகாட்டுதல்கள் வெளியிட்டது - சில இனங்களுக்கு திருந்திய வழிகாட்டுதல் வெளியிடுதல் - தொடர்பாக

தேதி

19-10-2022

G.O.Ms.No.248

வேளாண்மை -உழவர் நலத்துறை - வேளாண்மை நிதிநிலை அநிக்கை - 2022-2023 - முதலமைச்சரின் மானாவார் நில மேம்பாட்டு இயக்கம் - 2022-2023 ஆம் நிதியாண்டில் ரூ.87,10 கோடி நிதியில் செயல்படுத்துதல் - மாநில நிதி ரூ.45,75 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - பிற திட்ட நிதி ரூ.4135 கோடியினை பயள்படுத்த அனுமதி - வழிகாட்டு நெறிமுறைகளை அங்கீகரித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

14-09-2022

G.O.Ms.No.223

வேளாண்மை - உழவர் நலத் துறை -2022 23 - ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் -நெல்லுக்குப்பின் பயறு சாகுபடி திட்டத்தினை செயல்படுத்திட ரூ 17.00 கோடிக்கு நிருவாக அனுமதி மற்றும் 11.37 கோடிக்கு நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

07-09-2022

G.O.Ms.No.214

வேளாண்மை - உழவர் நலன் - வேளாண்மைப் பொறியியல் - வேளாண்மைப் பொறியியல் துறையின் வேளாண் இயந்திரங்களுக்கான தற்போதைய வாடகைக் கட்டணத்தை 15 சதவிதம் உயர்த்தி புதிய வாடகைக் கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு தலைமைப் பொறியாளர் ( வேளாண்மைப் பொறியியல்), சென்னை அவர்களுக்கு அனுமதி வழங்கி - ஆணை -வெளியிடப்படுகிறது.

தேதி

01-09-2022

G.O.Ms.No.205

வேளாண்மை - உழவர் நலத் துறை - வேளாண்மை நிதிநிலை அறிக்கை 2022-23 - அறிவிப்புகள் - விதைகள் மானிய விலையில் பனை விநியோகம், பனையேறும் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டு பனைபொருள் தயாரிப்பு உபகரணங்கள் வழங்குதல் மற்றும் பனைபொருள் தயாரிப்புக் கூடம் அமைத்தல், பனை விவசாயிகளுக்கு பயிற்சியளித்தல் மற்றும் சிறந்த பனையேறும் இயந்திரம் கண்டுபிடிப்பாளருக்கு விருதளித்து கௌரவித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன .

தேதி

24-08-2022

G.O.Ms.No.191

வேளாண்மை - உழவர் நலத் துறை 2022 23 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் - மாநில அளவில் உள்ளூர் புதுமையான வேளாண் தொழில்நுட்பம் மற்றும் உள்ளுர் விவசாய இயந்திரங்களின் கண்டுபிடிப்புகள் , வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகள் மற்றும் இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக மாநில அளவிலான விருதுகள் ரூ 6.00 லட்சத்திற்கு நிருவாக மற்றும் நிதி ஒப்பளிப்பு- ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

04-08-2022

G.O.2D.No.130

வேளாண்மை உழவர் நலன் - 2022-ஆம் ஆண்டிற்கான குறைந்தபட்ச ஆதார விலைத் திட்டத்தின் கீழ் கூடுதலாக அன்னுர் மற்றும் தொண்டாமுத்துர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை கொப்பரை கொள்முதல் நிலையங்களாக நியமித்து ஆணை -வெளியிடப்படுகிறது.

தேதி

29-07-2022

G.O.2D.No.127

வேளாண்மை உழவர் நலன் – 2022-ஆம் ஆண்டிற்கான குறைந்தபட்ச ஆதார விலைத் திட்டத்தின்கீழ் கொப்பரை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு (TANFED) அனுமதி அளித்து ஆணை . வெளியிடப்படுகிறது

தேதி

20-07-2022

G.O.Ms.No.159

வேளாண்மை உழவர் நலத் துறை – தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறையில் (TNOCD) பதிவு செய்யப்பட்ட அங்கக விளை பொருட்களின் நம்பகத் தன்மையை 100 சதவீதம் மாநில நிதியுதவியுடன் எஞ்சிய பூச்சிக் கொல்லிகளின் பகுப்பாய்விற்கு உட்படுத்துதல் திட்டத்தை 2022-23-ஆம் ஆண்டிலிருந்து தொடர அனுமதியும், நடப்பு ஆண்டில் செயல்படுத்த ரூ.12.50 இலட்சத்திற்கு நிதி ஒப்பளிப்பு வழங்கியும் ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

01-07-2022

G.O.Ms.No. 138

வேளாண்மை-உழவர் நலத் துறை– 2022-2023 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை அறிவிப்புகள் – பல்வேறு திட்டக் கூறுகளை உள்ளடக்கிய “மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம்” – திட்டச் செயலாக்கத்திற்காக ரூ.51.0225 கோடி நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்- வெளியிடுதல் – ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

23-06-2022

G.O.2D.No.111

வேளாண்மை – உழவர் நலன் – 2022-ஆம் ஆண்டிற்கான குறைந்தபட்ச ஆதாரவிலைத் திட்டத்தின்கீழ் கோயம்புத்தூர் விற்பனைக் குழுவில் கூடுதலாக ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் மற்றும் சிவகங்கை ஒழுங்கு முறை விற்பனைக் குழுவில் கூடுதலாக சிவகங்கை ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் ஆகியவற்றை கொப்பரை கொள்முதல் நிலையங்களாக நியமித்து - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

15-06-2022

G.O.Ms.No.126

வேளாண்மை – உழவர் நலன் – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர், பூச்சி அருங்காட்சியகம் (Insect Museum) மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல் – ரூ.125.00 இலட்சம் – நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

31-05-2022

G.O.D.No.142

வேளாண்மை-உழவர் நலத் துறை – 2022-23ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை - மாண்புமிகு அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - வேளாண் தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேளாண் கூலித் தொழிலாளர்கள் பதிவு செய்வதற்கான செயலியை உருவாக்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

31-05-2022

G.O.D.No.130

வேளாண்மை-உழவர் நலத் துறை – 2022-23ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை - மாண்புமிகு அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - “தமிழ் மண்வளம்” என்ற தனி இணைய முகப்பு (Portal) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து உருவாக்கப்படும் என்ற அறிவிப்பினை செயல்படுத்துதல் - ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

31-05-2022

G.O.Ms.No.113

வேளாண்மை-உழவர் நலத் துறை – வேளாண் நிதிநிலை அறிக்கை – 2022-23 மற்றும் மானிய கோரிக்கை 2022-2023-இன் பல்வேறு அறிவிப்புகள் – மாநில தோட்டக் கலை வளர்ச்சித் திட்டம் 2022-23-இன்கீழ் செயல்படுத்த ரூ.27.50 கோடி நிதி ஒப்பளிப்பு – ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

31-05-2022

G.O.Ms.No.111

வேளாண்மை – உழவர் நலன் – வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் - 2022-23ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை – மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் அறிவிப்பு – ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உழவர் சந்தை வீதம், மொத்தம் 37 உழவர் சந்தைகளில், விவசாய விளை பொருட்களின் விற்பனையை செயல்பாட்டு வழிமுறைகளின்படி மாலை நேரத்தில் செயல்படுத்த அனுமதி வழங்குதல் – ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

30-05-2022

G.O.D.No.128

வேளாண்மை-உழவர் நலத் துறை – 2022-23ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை - மாண்புமிகு அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - அனைத்து மாவட்டங்களிலும் வேளாண்மை விரிவாக்க பணமில்லா பரிவர்த்தனை முறையினை செயல்படுத்துதல் - ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

26-05-2022

G.O.D.No.124

வேளாண்மை-உழவர் நலத் துறை – 2022-23ஆம் ஆண்டிற்கான வேளாண்மைத் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை - மாண்புமிகு அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், நடவுக் கன்றுகள், பழமரச் செடிகள், தென்னங்கன்றுகள் மற்றும் இதர வேளாண் இடுபொருட்களை இணைய வழியாக முன்பதிவு செய்யும்முறை மற்றும் அனைத்துத் திட்டங்களிலும் பயனாளிகளின் விவரங்களை படிப்படியாக கணினியில் பதிவு செய்யும் முறையினை செயல்படுத்துதல் - ஆணை – வெளியிடப்படுகிறது

தேதி

24-05-2022

G.O.Ms.No.106

வேளாண்மை-உழவர் நலன் – மாண்புமிகு வேளாண்மை –உழவர் நலத் துறை அமைச்சர் அவர்கள் 13.04.2022 அன்று சட்டமன்றப் பேரவையில் வெளியிட்ட அறிவிப்புகள் – நவீன வேளாண் இய்ந்திரங்கள் மற்றும் வேளாண் பொறியியல் தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வினை விவசாயிகளிடையே ஏற்படுத்த 2022-23ஆம் ஆண்டில் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்விளக்கங்கள், பயிற்சிகள், கருத்தரங்குகள் நடத்துதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

23-05-2022

G.O.Ms.No.103

வேளாண்மை-உழவர் நலத் துறை – தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை – வேளாண்மை நிதிநிலை அறிக்கை 2022-23 – அறிவிப்புகள் – நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, ஏற்காடு, குற்றாலம் மற்றும் ஜவ்வாது மலைப் பகுதிகளில் உள்ள தோட்டக் கலைப் பண்ணைகளில் ரூ.100 இலட்சம் நிதியில் சுவைதாளிதப் பயிர்களுக்கான மரபணு வங்கி அமைத்தல் – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

28-04-2022

G.O.2D.No.81

வேளாண்மை-உழவர் நலத் துறை – வேளாண் நிதிநிலை அறிக்கை – 2022-23 - 2022-23ஆம் ஆண்டு செயல்படுத்தப்படீடும் உயர் மதிப்பு வேளாண் திட்டங்களில், ஆதிதிராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்குக் கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்க ஏதுவாக ரூ.5.00 கோடிக்கு நிருவாக மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் – ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

09-03-2022

G.O.Ms.No.59

வேளாண்மை-உழவர் நலத் துறை 2021-2022 வேளாண் நிதிநிலை அறிக்கை – கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-2022 வேளாண்மைத் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை – ரூ.227.0588 கோடிக்கான நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுதல் - ஆணை –வெளியிடப்படுகிறது.

தேதி

27-01-2022

G.O.D.No.13

வேளாண்மை-உழவர் நலத் துறை – விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மாநில அளவிலான வேளாண் உயர்நிலைக் குழு ஒன்று தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் அமைத்து ஆணையிடப்பட்டது – கூடுதல் தலைமைச் செயலாளர், நீர்வள துறை மற்றும் தலைமைப் பொறியாளர், நீர்வள துறை ஆகியோரை உறுப்பினர்களாகச் சேர்த்து திருத்திய ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

19-01-2022

G.O.Ms.No.14

வேளாண்மை-உழவர் நலத் துறை - தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை – அறிவிப்புகள் 2021-22 – கடலூர் மாவட்டம், வடலூரில் தோட்டக்கலைத் துறை மூலம் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் பண்ணை வரவின நிதியிலிருந்து ரூ 1.00 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைத்தல் – ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

13-01-2022

G.O.Ms.No.13

வேளாண்மை-உழவர் நலன்-சிறப்பு விருது – 2020-2021 – நெல் சாகுபடியில், செம்மை நெல் சாகுபடி தொழில் நுட்ப்பத்தினை கடைபிடித்து மாநிலத்திலேயே அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு குடியரசு தினத்தன்று மாண்புமிகு முதல்வர் அவர்களால் திரு சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது மற்றும் பரிசு வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.