அரசு ஆணைகள்

பள்ளிக் கல்வி துறை

தேதி

19-11-2019

அரசாணை (நிலை) எண். 210, பள்ளிக் கல்வி (தொக3(1)) துறை நாள் 19.11.2019

பள்ளிக் கல்வி – 2020-2021 ஆம் கல்வியாண்டிலிருந்து 6 முதல் 10ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லாக் காலணிகளுக்கு பதிலாக கால் ஏந்திகள் (Shoes) மற்றும் காலூறைகள் (Socks) வழங்க நிர்வாக அனுமதி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

11-11-2019

அரசாணை (நிலை) எண் 202

பள்ளிக் கல்வி – ஒன்றியங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மையமாக செயல்படும் உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளின் கீழ் உள்ள அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளை கண்காணிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மைய உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் சார்ந்து வழிகாட்டுதல் நெறிமுறைகள் (Guidelines) வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

25-10-2019

அரசாணை (நிலை) எண் 189

பள்ளிக் கல்வி – அரசு . அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ / மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ / மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதியுதவி ரூ.75,000/- வழங்கும் திட்டத்தினை 2019-2020 ஆம் ஆண்டு செயல்படுத்த நிதி ஒப்பளிப்பு வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

16-10-2019

அரசாணை (நிலை) எண் 183

பள்ளிக் கல்வி – 2019-2020 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு – தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 757 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்குதல் – சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் ரூ.14.60 இலட்சம் செலவில் செயல்படுத்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

25-09-2019

அரசாணை (ப) எண் 379, பள்ளிக் கல்வி (அதே) துறை, நாள் 25.09.2019.

பள்ளிக் கல்வி – அரசுத் தேர்வுகள் இயக்ககம் – மார்ச் 2020ல் இடைநிலை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தி பொதுத் தேர்வுகள் நடைமுறைப்படுத்துதல் – பழைய பாடத்திட்ட முறையில் தோல்வியுற்ற மாணாக்கர்களுக்கு மார்ச் 2020, ஜூன் 2020 ஆகிய இருபருவங்களில் தேர்வுகள் எழுதிக் கொள்ள அனுமதி அளித்து – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

18-09-2019

அரசாணை (நிலை) எண் 166

பள்ளிக் கல்வி – அரசுத் தேர்வுகள் இயக்ககம் – தமிழகத்தில் மேல்நிலை கல்வியில் தற்போது நடைமுறையிலுள்ள பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து மேம்படுத்தப்பட்ட பாடத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

17-09-2019

அரசாணை (நிலை) எண் 165, பள்ளிக் கல்வி (தொ.க.2(1)) துறை, நாள் 17.9.2019.

பள்ளிக் கல்வி – சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு W.A. (MD) Nos. 76, 225, 341 of 2019, 1612, 1076, 1093, 1461, 1473 and 1531 of 2018-ல் 09.04.2019-ம் நாளிட்ட தீர்ப்பின் அடிப்படையில் – அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை / சிறுபான்மையற்ற தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வது தொடர்பான – நெறிமுறைகள் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

13-09-2019

அரசாணை (நிலை) எண் 164, பள்ளிக் கல்வி (MS) துறை, நாள் 13.9.2019.

பள்ளிக் கல்வி – குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் (திருத்தம்) சட்டம் 2019 – மாநில பாடத்திட்டத்தினை பின்பற்றி செயல்பட்டு வரும் பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020 ஆம் கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்துதல் –ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

13-09-2019

அரசாணை (நிலை) எண் 161, பள்ளிக் கல்வி (அதே) துறை, நாள் 13.9.2019.

பள்ளிக் கல்வி – இடைநிலைக் கல்வி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மொழிப்பாடம் / ஆங்கில பாடம் – இரு தாள்களாக தேர்வு எழுதும் நடைமுறையை ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்திட அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதியளித்து ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

13-09-2019

அரசாணை (நிலை) எண் 161, பள்ளிக் கல்வி (அதே) துறை, நாள் 13.9.2019

பள்ளிக் கல்வி – இடைநிலைக் கல்வி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மொழிப்பாடம் / ஆங்கில பாடம் – இரு தாள்களாக தேர்வு எழுதும் நடைமுறையை ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்திட அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதியளித்து ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

05-09-2019

அரசாணை (நிலை) எண் 157

பள்ளிக் கல்வி – 2017-18 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு எண். 9ன் படி, முதற்கட்டமாக, 19,427 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றியமைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

20-06-2019

அரசாணை (1D) எண் 218 பள்ளிக் கல்வி நாள் 20.6.2019

பள்ளிக் கல்வி – ஆசிரியர் பொது மாறுதல் – ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் – அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 2019-20 ஆம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

06-05-2019

அரசாணை (நிலை) எண் 79,. பள்ளிக் கல்வி (Ms) துறை

பள்ளிக் கல்வி – தமிழகத்தில் சுயநிதியில் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகள் நிதி உதவி பெறும் அனைத்து வகையான பள்ளிகள் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள், மெட்ரிகுலேசன் மற்றும் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள் – உரிய அமைப்பிடமிருந்து பள்ளிக் கட்டிட அனுமதி பெறாத பள்ளிகளின் தற்காலிகத் தொடர் அங்கீகாரம் 31.05.2020 வரை நீட்டித்து – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

07-03-2019

G.O Ms.No. 44

பள்ளிக் கல்வி பாடத்திட்டம் – 3, 4, 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றம் 2019-2020-ஆம் கல்வியாண்டில் நடைமுறைப் படுத்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

19-02-2019

அரசாணை (நிலை) எண். 33 பள்ளிக் கல்வி (தொ.க.1(1)) துறை

பள்ளிக் கல்வி - ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு போட்டித் தேர்வுக்கென புதிய பாடத்திட்டம் நிர்ணயம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2014 |