அரசு ஆணைகள்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

தேதி

05-08-2022

G.O (Ms) No.65

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - கல்வி - விடுதிகள் – 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு –தென்காசி மாவட்டம், பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதி, சோலைச்சேரி மற்றும் சீர்மரபினர் நலக் கல்லூரி மாணவர் விடுதி, சங்கரன் கோவில் ஆகிய இரண்டு விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்ட நிருவாக ஒப்புதல் வழங்கப்பட்டது – நிதி ஒப்பளிப்பு அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

20-07-2022

அரசாணை (நிலை) எண்.57

சிறுபான்மையினர் நலன் - மானியக் கோரிக்கை அறிவிப்புகள் 2022-2023 - கிராமப்புறங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவியர் இடைநிற்றல் இன்றி, தொடர்ந்து கல்வி பயில 3-ஆம் வகுப்பு முதல் 6-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் - செயற்படுத்துதல் - ஆணைகள் - வெளியிடப்படுகிறது.

தேதி

18-07-2022

அரசாணை (நிலை) எண்.55

சிறுபான்மையினர் நலன் - கிறித்தவ மகளிர் உதவும் சங்கம் - அரசின் இணை மானியம் - 22 மாவட்டங்களைச் சார்ந்த கிறித்தவ மகளிர் உதவும் சங்கங்களுக்கு அரசின் இணை மானியமாக ரூ.1,62,57,042/- ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

01-07-2022

அரசாணை (நிலை) எண்.51

அறிவிப்புகள் - 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் – பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் – 275 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளுக்கு அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள மின்நூல்கள் உட்பட இதர மின்நூல்களை இணைய வழியில் படிப்பதற்கு ஏதுவாக கணினி மற்றும் இதர உபகரணங்கள் எல்காட் மூலம் வாங்கி வழங்க நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

01-07-2022

அரசாணை (நிலை) எண்.52

அறிவிப்புகள் - 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் – பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலப் பள்ளி மாணவியர் விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் கல்லூரி மாணவியரை சேர்க்க அனுமதி வழங்குதல் மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

21-06-2022

அரசாணை (நிலை) எண்.48

சிறுபான்மையினர் நலன் – 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - சென்னையில் மாநில அளவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18-ம் தேதி “சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா” கொண்டாடுவதற்கு ரூ.2,50,000/- (ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்து – ஆணை – வெளியிடப்படுகிறது

தேதி

20-06-2022

G.O (Ms) No.47

அறிவிப்புகள் - 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் – தமிழ்நாடு வக்ஃப் வாரியம் - உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு அவரது நேரடி வாரிசுதாரருக்கு உலமா குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

03-06-2022

அரசாணை (நிலை) எண்.43

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் – 2021-2022 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் - ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தினை (IFHRMS) செயல்படுத்திட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககங்கள் மற்றும் 38 மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களுக்கு கணினிகள் மற்றும் உபகரணங்கள் வழங்க நிதி ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

31-05-2022

அரசாணை (நிலை) எண்.41

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் - 2021-2022-ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள், காப்பாளினிகளுக்கு 3 நாட்கள் புத்தாக்கப் பயிற்சி வழங்க நிதி ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

25-05-2022

அரசாணை (நிலை) எண்.39

சிறுபான்மையினர் நலன் - 2021-2022-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைத்தல் – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

30-03-2022

அரசாணை (ப) எண். 23

சிறுபான்மையினர் நலன் - முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் – 17 மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களால் 2021-2022-ஆம் ஆண்டின் முதல் பருவத்தில் திரட்டிய நிதி ஆதாரத்திற்கேற்ப அரசின் மானியத் தொகையினை ஒப்பளிப்பு செய்து – ஆணைகள் - வெளியிடப்படுகிறது.

தேதி

28-03-2022

அரசாணை (ப) எண்.17

சிறுபான்மையினர் நலன் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் 26 மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களால் 2020-21ஆம் ஆண்டின் இரண்டாம் பருவத்தில் திரட்டிய நிதி ஆதாரத்திற்கேற்ப அரசின் மானியத் தொகையினை ஒப்பளிப்பு செய்து ஆணைகள் வெளியிடப்படுகிறது.

தேதி

08-03-2022

அரசாணை (நிலை) எண்.22, நாள் 08.03.2022

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை – உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க ரூ.14,85,286/- ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

07-03-2022

அரசாணை (நிலை) எண்.21, நாள் 07.03.3022

அறிவிப்புகள் - 2021 – 2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் – தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு உட்பட்ட 4 சரக அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

07-03-2022

அரசாணை (நிலை) எண்.19, நாள் 07.03.2022

அறிவிப்புகள் - 2021 – 2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் – தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தால் வக்ஃப் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் சகாயத் தொகைக்கு ஏற்ப, விகிதாச்சார அடிப்படையில் 5 சதவீதம் ஊக்கத் தொகையாக தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு வழங்கப்படும் நிர்வாக மானியத்துடன் சேர்த்து வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

04-03-2022

அரசாணை (நிலை) எண். 16

சிறுபான்மையினர் நலம் – மானியக் கோரிக்கை அறிவிப்புகள் 2021-2022 – 5 (ஐந்து) மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் தோற்றுவித்தல் – ஆணைகள் – வெளியிடப்படுகிறது.

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 | 2013 |