அரசு ஆணைகள்

ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை

தேதி

20-11-2017

G.O.Ms.No.70

பொதுப்பணிகள் - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பணியிடத்திற்கு 1986-87 ஆம் ஆண்டு முதல் 2017-18 ஆம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட தற்காலிகத் தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிகப் பணி நியமனங்களை வரன்முறைப்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

23-10-2017

G.O. Ms. No. 63

ஆதி திராவிடர் மற்றம் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - விடுதிகள் - மாண்புமிகு அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - திருச்சி மாவட்டம், துறையூர் மாணவியர் விடுதி மற்றும் செங்காட்டுப்பட்டி மாணவர் விடுதிக் கட்டடங்கள் ரூ.5.90 கோhடி மதிப்பீட்டில் கட்டுதல் - நிர்வாக ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

11-10-2017

G.O. Ms. No. 62

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - மாண்புமிகு அமைச்சர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் அவர்களின் அறிவிப்பு - 2017-18 ஆம் கல்வியாண்டில் 11 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகள் மற்றும் 3 ஆதி திராவிடர் நல பள்ளிகளை அவற்றின் அடுத்த நிலைக்கு நிலை உயர்த்துதல் - நருவாக ஒப்பளிப்பு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

11-10-2017

G.O. D. No. 255

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - அரசுப் பள்ளிகள் / ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் / அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சிப் பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் ஆதி திராவிடர் / பழங்குடியின மாணாக்கர்களைத் தேர்வு செய்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மிகச் சிறந்த தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்த்து 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலச் செய்யும் திட்டம் 2017-18 ஆம் கல்வி ஆண்டில் திட்டத்தினைச் தொடர்ந்து செயல்படுத்துவதன் பொருட்டு நிதி ஒப்பளித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

09-10-2017

G.O. D. No. 251

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பழங்குடியினர் மேம்பாடு - மாண்புமிகு அமைச்சர் (ஆதி ம பந) அவர்களால் 18.07.2017 அன்று சட்டமன்ற பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு- பழங்குடியின விவசாயிகள் துரிதமாக மின் இணைப்பு பெறுவதற்கு ரூ. 75,000/- வீதம் 100 பேர் பயன்பெறுவதற்காக விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 75 இலட்சத்தினை தாட்கோ மூலமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு வைப்பீடு தொகையாக வழங்குதல் - நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

09-10-2017

G.O. D. No. 252

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பழங்குடியினர் மேம்பாடு - மாண்புமிகு அமைச்சர் (ஆதி ம பந) அவர்களால் 18.07.2017 அன்று சட்டமன்ற பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு- பழங்குடியின மக்களுக்காக திருச்சி மாவட்டம், பச்சமலை மற்றும் தென்புறநாட்டில் விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூ.50 இலட்சம் இரு சமுதாயக் கூடங்கள் கட்டுதல் - நிதி ஒப்பளிப்புஆணை வெளியிடப்படுகிறது

தேதி

28-08-2017

G.O Ms No. 56

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - பணியாளர் தொகுதி - பழங்குடியினர் நலம் - பழங்குடியினர் நலப் பொருண்மை குறித்த நிர்வாக மற்றும் நிதி அதிகாரங்களை பழங்குடியினர் நல இயக்குநருக்கு அளித்தல் - பழங்குடியினர் நல இயக்ககம் முழு அதிகாரத்தோடு கூடிய தனிப்பொறுப்புடன் செயல்பட அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

23-08-2017

G.O. D. No. 213

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பழங்குடியினர் மேம்பாடு - மாண்புமிகு அமைச்சர் (ஆதி ம பந) அவர்களால் 18.07.2017 அன்று சட்டமன்ற பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - பழங்குடியின மக்கள் அனைவரும் இணையதளம் வாயிலாக பயனடையும் வகையில், ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஓர் இணையதளம் உருவாக்குதல் - நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

16-08-2017

G.O. Ms. No. 54

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் அவர்களால் 27.08.2015 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் விதி 110-இன் கீழ் அறிவிக்கப்பட்டவாறு சென்னை, திருவள்ளூர், கோயம்புத்துhர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பணிபுரியும் மகளிருக்கான 4 புதிய விடுதிகள் தொடங்குதல் - நிர்வாக ஒப்பளிப்பு- ஆணைகள் வெளியிடப்படுகிறது.

தேதி

25-04-2017

G.O Ms No. 34

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - பணியாளர் தொகுதி - ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டப் பகுதிகளில் பழங்குடியின மக்களுக்கான நலத்திட்டப் பணிகளை செயல்படுத்திட 7 மாவட்டங்களில் திட்ட அலுவலகங்களை உரிய அலுவலர் / பணியாளர்களுடன் தோற்றுவித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.

தேதி

20-01-2017

G.O.Ms.No.5

ஆதி திராவிடர் நலம் - நிலம் - ஒப்படை - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் ஒரே அளவிலான ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.72,000/- ஆக உயர்த்துதல் - ஆணை