அரசு ஆணைகள்

ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை

தேதி

24-12-2018

G.O.Ms.No. 70

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - விடுதிகள் -விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்கு அவர்தம் உடைமைகளை பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு 1297 விடுதிகளில் (1254 ஆதிந விடுதிகள், 43 ப.ந விடுதிகள் ) ஏற்கனவே அறையில் அமைக்கப் பெற்றிருக்கும் ஆர்.சி.சி அலமாரிகளுக்கு தனித்தனி இரும்புக் கதவு மற்றும் பூட்டு சாவி ஏற்பாடுகளுடன் கூடிய வசதிகளை ரூ.25.94 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்துதல் - நிர்வாக ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

19-12-2018

G.O.Ms.No. 69

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - விடுதிகள் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - சென்னை மாவட்டம், இராயபுரம், பழுதடைந்த நிலையில் உள்ள தொழிற்கல்வி பயிலும் மகளிர் விடுதிக் கட்டடத்தினை இடித்துவிட்டு, அந்த இடத்திலேயே ரூ. 3,52,76,432/- மதிப்பீட்டில் இரண்டு மாணவியர் விடுதிக் கட்டடங்கள் கட்டுதல் - நிர்வாக ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

03-12-2018

G.O.Ms.No.38

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - 2015-16 ஆம் ஆண்டின் அறிவிப்புகள் - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ மாணவியர்களுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி அளித்தல் - கூடுதல் விதிமுறைகள் ஏற்படுத்துதல் -ஆணைகள் வெளியிடப்படுகின்றன.