அரசு ஆணைகள்

சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை

தேதி

11-07-2013

G.O.(Ms) No.71

சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - கிராமப்பகுதி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 20,244 குழந்தைகளுக்கேற்ற கழிப்பிடங்கள் கட்டுவதற்கு ரூ.36.4392 கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் கண்காணிப்பு குழு அமைத்து நிர்வாக அளவிலான ஆணைகள் வெளியிடப்பட்ட அரசாணைக்கு சில திருத்தங்கள் செய்து – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

15-05-2013

G.O.(D) No.44

முதலமைச்சர் பொது நிவாரண நிதி – சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டாரம், தீர்த்தகிரிப்பட்டி அங்கன்வாடி மைய குழந்தைகள் சிறுவன் நிஷாந்த் மற்றும் சிறுவன் குரு ஆகிய இருவரும் 18.08.2011 அன்று மையத்திலிருந்து வெளியே செல்லும் போது கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து மரணமடைந்ததற்கு அவர்களது குடும்பத்தினருக்கு – முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இழப்பீடாக ஒரு குழந்தைக்கு ரூ.50,000/- வீதம் மொத்தம் ரூ.1,00,000/- நிதியுதவி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

11-02-2013

G.O.(Ms) No.18

சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை - ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம்- புதுக்கோட்டை மாவட்டம் - கந்தர்வக்கோட்டை வட்டாரம் - அங்கன்வாடி பணியாளர் திருமதி.எஸ்.கலாராணி 100ரூ கண்பார்வை குறைபாடு காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டது – சிறப்பினமாக சிறப்பு ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஓய்வூதியப் பயன்கள் வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

08-01-2013

G.O.(Ms) No.5

சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - 6202 அங்கன்வாடி கட்டிடங்களில் பெரிய பழுதுகள் சரி செய்யும் பணிகளுக்காக ரூ.39.1376 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டது – சில திருத்தங்கள் செய்து ஆணை – வெளியிடப்படுகிறது.