அரசு ஆணைகள்

சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை

தேதி

04-12-2015

Letter (Ms) No.75

சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - மலைப்பகுதி மற்றும் பெரும்பாலான பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் உள்ள/ஏற்படும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போது, இனசுழற்சி முறையிலிருந்து விலக்களித்து இப்பணியிடங்களை அம்மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களைக் கொண்டு நிரப்புவதற்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட இயக்குநருக்கு அனுமதி வழங்குதல் – ஆணைகள் வெயிடப்படுகிறது.

தேதி

12-10-2015

Letter (Ms) No.65

ஒகுவதிட்டம் - திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற அனைத்து அங்கன்வாடி பணியாளர்கள், மற்றும் பு.த.எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் ஓய்வுபெற்ற அனைத்து சத்துணவு ஆகியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான வாழ்வுறுதிச் சான்றினை (Life Certificate) 3 மாதத்திற்கு ஒருமுறை சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரடியாக சென்று வழங்குவதிலிருந்து விலக்களித்து நிழற்படத்துடன் கூடிய வாழ்வுறுதிச் சான்றினை ஆண்டிற்கு ஒருமுறை சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அஞ்சல் வாயிலாக அல்லது நேரடியாக சென்று வழங்கும் நடைமுறைகள் குறித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

01-10-2015

G.O.(Ms) No.64

சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - 04.08.2015 அன்று வாழப்பாடி வட்டம், புதுப்பாளையம் டாஸ்மாக் கடைக்கு சில விஷமிகள் தீ வைத்ததினால் காலமான பணியாளர் திரு. செல்வம் என்பவரது வாரிசுதாரருக்கும், 07.04.2015 அன்று ஆந்திர மாநிலம் சேஷாசல வனப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட கூலித் தொழிலாளி திரு. சசிகுமாரின் வாரிசுதாரருக்கும் அங்கன்வாடி உதவியாளராக கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டது – பின்னேற்பாணை - வெளியிடப்படுகிறது.

தேதி

20-04-2015

G.O.(D) No.59

சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம், திருவிடைமருதூர் கிராம அங்கன்வாடி மைய உதவியாளர் திருமதி. நாகலெட்சுமி பாம்பு தீண்டி இறந்தமைக்காக அவரது குடும்பத்தினருக்கு மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 3.00 லட்சம் நிதியுதவி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

02-01-2015

G.O.(D) No.01

முதலமைச்சர் பொது நிவாரண நிதி – சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - திருநெல்வேலி மாவட்டம், இரவணசமுத்திரம் கிராமம், மீனாட்சிபுரம் அங்கன்வாடி மையக் குழந்தை வெண்ணிலாவின் பெற்றோருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இழப்பீடாக ரூ.50,000 நிதியுதவி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது