அரசு ஆணைகள்

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை

தேதி

12-12-2016

G.O.(1D) No.85

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் நிவாரண உதவித் தொகை வழங்கும் திட்டத்தினை, 2016-2017 ஆம் நிதியாண்டில் தொடர, திட்டத் தொடராணை மற்றும் 24,556 பயனாளிகளுக்கு நிவாரண உதவித் தொகை வழங்க ரூ.22,66,48,800/- நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

08-12-2016

G.O.(Ms) No.39

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் பெற்று பயனடையும் வகையில் பொது சேவை மையங்களின் இணையதள வழியாக இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வசதிகள் ஏற்படுத்திட நிர்வாக அனுமதி வழங்கி- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

01-12-2016

G.O.(Ms) No.38

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110ன் கீழ் 30.08.2016 ஆம் நாளிட்ட அறிவிப்பு - தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள், 2016-2017 - நேரடியாக பிறருடன் பேசி தொடர்பு கொள்ள இயலாத நிலையில் உள்ள மூளை முடக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட, புற உலக சிந்தனை இல்லாத மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மாற்று வழியில் பிறருடன் தொடர்பு கொள்ள உதவும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கணினி மென்பொருளுடன் கூடிய உபகரணம் (AAVAAZ) வழங்க ரூ.106.46 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

30-11-2016

G.O.(Ms) No.37

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்புகள் - 2016-17ஆம் நிதியாண்டு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன ஒளிரும் மடக்கு குச்சிகள் வழங்கும் திட்டம்- நிருவாக அனுமதி வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

28-11-2016

G.O.(1D) No.84

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - 2016-ஆம் ஆண்டு அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான மாநில அரசு விருதுகள் வழங்குதல் - ஆணை -வெளியிடப்படுகிறது.

தேதி

25-11-2016

G.O.(1D) No.82

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- 2016-17 ஆம் நிதியாண்டிற்கு பார்வையற்றோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் தேர்வு எழுத அமர்த்தப்படும் உதவியாளர்களுக்கு உதவித் தொகை (Scribe Assistance) வழங்கும் திட்டத்திற்கு திட்டத் தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து- ஆணை- வெளியிடப்படுகிறது. .

தேதி

25-11-2016

G.O.(1D) No.83

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- இருகால்கள் பாதிக்கப்பட்ட 1000 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம்- 2016-17 ஆம் நிதியாண்டில் தொடர திட்டத் தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்வது -ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

15-11-2016

G.O. (1D) No.80

மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு சிறப்புப் பள்ளிகள் - அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் பள்ளிப் படிப்பினை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து படித்திட, ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - 2016-2017ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.21,56,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

15-11-2016

G.O. (1D) No.79

மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் பார்வையற்ற, செவித்திறன் குறைபாடுடைய மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத் திறனாளி மாணவ / மாணவியர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கும் திட்டம் - 2016-2017ஆம் நிதியாண்டு - நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

14-11-2016

G.O.(Ms) No.33

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை-மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு நலத் திட்டங்கள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மாவட்ட அளவில் கலை நிகழ்வுகள் மற்றும் தெருமுனை நாடகங்கள் செயல்படுத்த ரூ.6,40,000/- நிதி ஒப்பளிப்பு செய்து- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

09-11-2016

G.O.(1D) No.73

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பகல் நேர பராமரிப்பு மையங்கள்-2016-17 ஆம் நிதியாண்டிற்கான திட்டத் தொடராணை மற்றும் ரூ.29,47,800/- நிதி ஒப்பளிப்பு வழங்குவது - ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

26-10-2016

G.O.(Ms) No.32

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் உள்ள அனைத்து மாவட்ட நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனத்திற்கான ஓட்டுநர்களுக்கான தொகுப்பூதியத்தினை ரூ.8000/-லிருந்து ரூ.10,000/- ஆக உயர்த்தி வழங்குதல் கூடுதல் தொகை ரூ.3,84,000/- ஒப்பளிப்பு வழங்கி - ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

19-10-2016

G.O.(1D) No.71

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- தேனி மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக நடத்தப்படும் இரண்டு பகல் நேர காப்பகங்கள்- 2016-17 ஆம் நிதியாண்டிற்கான திட்டத் தொடராணை மற்றும் ரூ.7,76,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல்- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

07-10-2016

G.O. (1D) No.69

மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் பார்வையற்ற, செவித்திறன் குறைபாடுடைய மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத் திறனாளி மாணவ / மாணவியர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கும் திட்டம் - 2016-2017ஆம் நிதியாண்டு - நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

27-09-2016

G.O. (Ms) No.30

மாற்றுத் திறனாளிகள் நலன் - சிறப்புப் பள்ளி - காரைக்குடி காதுகேளாதோருக்கான அரசுப் பள்ளி, சிவகங்கை மாவட்டம் - மாணவ / மாணவியர்கள் குறைவாக பயிலுதல் - நிரந்தரமாக மூடுதல் மற்றும் அனுமதிக்கப்பட்ட பணியிடத்தினை இதர அரசு பள்ளிக்கு மாற்றி அமைத்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

16-09-2016

G.O.(1D) No.65

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- 2016 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 3 ஆம் நாளினை அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரித்தல்- மாநில மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துதல்- ரூ.18,98,654/- நிதி ஒப்பளிப்பு வழங்குவது - ஆணை -வெளியிடப்படுகிறது.

தேதி

15-09-2016

G.O.(1D) No.64

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- 0 முதல் 6 வயது வரை உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான 32 நடமாடும் சிகிச்சை பிரிவுகள்- 2016-2017 ஆம் ஆண்டிற்கான திட்டத் தொடராணை மற்றும் தொடர் செலவினத்திற்கு நிதி ஒப்பளிப்பு செய்தல்- ஆணை- வெளியிடப்படுகிறது

தேதி

08-09-2016

G.O.(1D) No.63

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- மனவளர்ச்சி குன்றிய 14 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப் பெறும் நான்கு இல்லங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், ஐ. இ. எல். சி மனவளர்ச்சி குன்றியோருக்கான மறுவாழ்வு இல்லம், பேரணாம்பட்டு, வேலூர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியினை இரத்து செய்து பெத்தேல் தொண்டு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

30-08-2016

G.O. (Ms) No.26

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை - கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துனர் பயிற்சி பெற்று வருகின்ற காது கேளாத மற்றும் வாய்பேசாத மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ரூ.300/-லிருந்து ரூ.500/- ஆக உயர்த்துதல் மற்றும் அரசு வழங்கும் இலவச சீருடைகள் தைக்க தையற் கூலி ஒரு நபருக்கு ரூ.300/- அளித்தல் - நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

11-08-2016

G.O.(Ms) No.24

மாற்றுத் திறனாளிகள் நலன் - 10 அரசு மறுவாழ்வு இல்லங்களில் வசிக்கும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட 975 இல்லவாசிகள் - காலணிகள் வாங்கி வழங்கும் திட்டம் - 2016-2017ஆம் நிதியாண்டு - திட்டத்தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

12-07-2016

G.O.(1D)No.43

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் நடைபெற்ற மகாமக விழாவின் போது 30 நாட்கள் அரசு பொருட்காட்சி நடத்தியதற்கு ரூ.66,000/- நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

28-06-2016

G.O. (1D) No.41

மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மறுவாழ்வு இல்லங்கள் - 10 அரசு மறுவாழ்வு இல்லங்களில் வசிக்கும் இல்லவாசிகளுக்கு 2016, தீபாவளி தினத்தன்று கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் 1 ஜதை வேட்டி-சட்டை மற்றும் புடவை-ரவிக்கைத் துணி வழங்குதல் - ரூ.4,87,585/- நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

31-05-2016

G.O.(1D)No.39

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை-2015-16 ஆம் நிதியாண்டில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் காதொலிக் கருவிக்கென ஒப்பளிக்கப்பட்ட தொகையை 2014-15 ஆம் நிதியாண்டு கொள்முதல் செய்யப்பட்ட காதொலிக் கருவிகளுக்கு நிதி ஒப்பளிப்பு வழங்கிய மாற்றுத் திறனாளிகளுக்கு மாநில ஆணையரின் செயலுக்கு பின்னேற்பாணை வழங்கி- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

30-03-2016

G.O.(Ms) No.19

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்ய சலுகை மற்றும் மாற்றுத் திறனாளி மாணவ/மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு பேருந்தில் இலவச பயணச் சலுகை - தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழங்களுக்கு 2012-2013, 2013-2014 மற்றும் 2014-2015 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகை- நிதி ஒப்பளிப்பு - ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

03-03-2016

G.O. (Ms) No.16

மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மறுவாழ்வு இல்லங்கள் - சென்னை - தொழுநோயால் பாதிக்கப்பட்ட கூடுதலாக கண்டறியப்பட்டுள்ள 309 பயனாளிகளுக்கு 2014-2015ஆம் ஆண்டிற்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்குவது - ரூ.76,86,000/- - நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

02-03-2016

G.O. (1D) No.25

மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்புப் பள்ளிகள் - 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற காதுகேளாத மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசு, பாடப் புத்தகம் மற்றும் விடுதிக் கட்டணம் வழங்கும் திட்டம் - 2015-16 ஆம் நிதியாண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.27,07,500/- நிதி ஒப்பளிப்பு வழங்குவது - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

02-03-2016

G.O. (Ms) No.12

மாற்றுத் திறனாளிகள் நலன் - திரு. ஆர். ராஜாராமன், மாற்றுத் திறனாளி மாணவர் - பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றது - உயர்கல்வி தொடருதல் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி - ரூ.3.00 இலட்சம் - நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

16-02-2016

G.O. (Ms) No.9

மாற்றுத் திறனாளிகள் நலன் - தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பெறும் காது கேளாத மற்றும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மானியம் வழங்கும் திட்டம் - 2015-2016 ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.1,76,40,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

12-02-2016

G.O. (Ms) No.5

மாற்றுத் திறனாளிகள் நலன் - மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்களுக்கு ஊதிய மானியம் வழங்கும் திட்டம் - 2014-2015 ஆம் நிதியாண்டில் விடுபட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.28,20,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

02-02-2016

G.O. (Ms) No.3

மாற்றுத் திறனாளிகள் நலன் - இடைநிலை ஆசிரியர் பயிற்சி - கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான இடைநிலை ஆசிரியர் பயிற்சி 2013-14 மற்றும் 2014-15ஆம் ஆண்டிற்கான விளம்பரக் கட்டணச் செலவினம் ரூ.3,54,689/- நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

25-01-2016

G.O. (Ms) No.2

மாற்றுத் திறனாளிகள் நலன் - 2015-16 ஆம் நிதியாண்டு - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110ன் கீழ், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - புதுக்கோட்டை, காதுகேளாதோருக்கான அரசு நடுநிலைப் பள்ளிக்கு சொந்தக் கட்டடம் கட்டுவது - ரூ.1.16 கோடி நிதி ஒப்பளிப்பு செய்வது - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

22-01-2016

G.O.(1D) No.5

மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு சிறப்புப் பள்ளிகள் - அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் பள்ளிப் படிப்பினை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து படித்திட, ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - 2015-2016 ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.20,88,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 |