அரசு ஆணைகள்

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை

தேதி

08-12-2021

G.O.(D) No.36

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை – அதிக உதவி தேவைப்படும் மாற்றுத் திறனாளிகள் (High Support Need) – 2019–2020-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட 856 கூடுதல் பயனாளிகள் ஒரு உதவியாளரை வைத்து தங்களை பராமரித்துக் கொள்ள ஏதுவாக மாதாந்திர பராமரிப்பு தொகை ரூ.1000/- உதவித் தொகை வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

06-12-2021

G.O. (D) No.34

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை – பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் செவித்திறன் பாதிப்படைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசிகள் வழங்குதல் – நிதி ஒப்பளிப்பு – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

26-10-2021

G.O.(Ms) No.11

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை – பணியமைப்பு – புதியதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் தோற்றுவிப்பது - பணியிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல் – ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

04-10-2021

G.O (D) No. 28

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - அரசு மறுவாழ்வு இல்லங்கள் - தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பராமரிப்பு உதவித் தொகை – காத்திருப்போர் பட்டியலில் உள்ள 2089 பயனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்க தேவைப்படும் நிதி ரூ.1,88,01,000/- செலவு செய்ய அனுமதி அளித்து - ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

29-09-2021

G.O Ms. No. 09

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- பிறருடன் பேசித் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் உள்ள, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட, புற உலக சிந்தனை இல்லாத மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மாற்று வழியில் பிறருடன் தொடர்பு கொள்ள உதவும் வகையில், பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருளுடன் கூடிய உபகரணம் (AVAZ) 300 எண்ணிக்கையில் வாங்கி வழங்குதல் – நிதி ஒப்பளிப்பு – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

11-09-2021

G.O.(D) No.24

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – 2021ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் நடைபெற உள்ள 10 மற்றும் 11ஆம் வகுப்புக்கான துணைத் தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தற்போது நிலவிவரும் கோவிட்-19 நோய் தொற்று பரவல் காரணமாக தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

28-07-2021

G.O (D) No. 20

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - அதிக உதவி தேவைப்படும் (High Support Need) மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக்கொள்ள உதவித்தொகை வழங்கும் திட்டம் - 2021-2022ம் நிதியாண்டிற்கு திட்ட தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

23-07-2021

G.O (D). No. 19

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - பார்வைத்திறன் குறையுடையோர் எளிதில் பிரெய்லி முறையில் கற்பதற்கு ஏதுவாக மின்னணு வடிவில் உள்ள புத்தகங்களை தொடு உணர்வுடன் அறிய உதவும் வாசிக்கும் கருவி (Electronic Braille Reader) - 204 பயனாளிகளுக்கு வழங்குதல் - நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

22-07-2021

G.O. (Ms) No.05

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் உள்ள அனைத்து மாவட்ட நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனங்களில் பணியாற்றும் ஊர்தி ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தொகுப்பூதியத்தினை முறையே ரூ.10,000/- லிருந்து ரூ.12,000/- மற்றும் ரூ.5000/- லிருந்து ரூ.8,000/- ஆக உயர்த்தி வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

14-07-2021

G.O. (Ms) No.4

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை – பணியமைப்பு – காஞ்சிரம் மாவட்டம் மற்றும் புதியதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்துர் மாவட்டங்களில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகங்கள் தோற்றுவிப்பது - பணியிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல் – ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

07-07-2021

G.O (Ms) No.03

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்தில் பயணம் செய்யும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை களைய அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவில் பழைய உறுப்பினர்களுக்கு பதிலாக புதிதாக இரண்டு உறுப்பினர்களை சேர்த்தல் – ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

03-06-2021

G.O Ms. No. 01

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - மாற்றுத் திறனாளிகளுக்கும் அவர்களுடன் செல்லும் ஒரு உதவியாளருக்கும் தமிழக அரசின் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் (White Board) கட்டணமில்லா பயண வசதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 |